தமிழ்

My Aged Care (Radio 4EB – Tamil Oli, QLD)

இந்த அத்தியாயத்தில், திருமதி. உமா பால்வண்ணன் "My Aged Care" சேவையின் நுகர்வோர் திரு. ராஜப்பா  சுப்பிரமணியத்துடன் கலந்துரையாடுகிறார். "My Aged Care" சேவைகள் ஆஸ்திரேலியாவில் "சிறப்பாக முதுமை" பெற அவருக்கு எவ்வாறு உதவுகிறது என்பதைப் பற்றியும் விளக்குகிறார். மேலும், "My Aged Care" குறித்த தனது தனிப்பட்ட அனுபவங்களில் சிலவற்றை அவர் பகிர்ந்துகொள்கிறார்.

மேலும் தகவல்களுக்கு, myagedcare.gov.au என்ற இணையதளத்தை அணுகவும்.

நினைவிழப்பு – ஆரம்ப நிலை (Dementia Early Stages) (Radio 4EB – Tamil Oli, QLD)

இப்பகுதியில், திருமதி. உமா பால்வண்ணன் மருத்துவர். அபர்ணா அர்ஜுனனுடன் (முதுமையியல் சிறப்பு மருத்துவர்) ஒரு தற்செயலான உரையாடலை மேற்கொள்கிறார், முதியவர்களில் Demential-வின்  விளைவுகளை கோடிட்டுக் காட்டுகிறார். ஆரம்ப கட்டத்தில் Dementia-வை  அடையாளம் காண்பதில் உள்ள சிக்கலை மருத்துவர். அபர்ணா அர்ஜுனன் விளக்குகிறார் மற்றும் இது தொடர்பான உதவிகளை எவ்வாறு பெறுவது  எஎன்பதை கோடிட்டுக் காட்டுகிறார்.

மேலும் தகவல்களுக்கு, myagedcare.gov.au என்ற இணையதளத்தை அணுகவும்.

நினைவிழப்பு – முதிர்ந்த நிலை (Dementia Advanced Stages) (Radio 4EB – Tamil Oli, QLD)

இப்பகுதியில், திருமதி. உமா பால்வண்ணன், திருமதி ராகினி பூனன் (முதியோர் பராமரிப்பு சேவை ஊழியர்) உடன் சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. திருமதி ராகினி பூனன் Dementia-வால் பாதிக்கப்பட்ட முதியோர்களை எவ்வாறு அன்றாட வாழ்வில்  நிர்வகிக்கிறார் என்பது குறித்த தனது கதையை பகிர்ந்து கொள்கிறார். வயதானோர் பராமரிப்பில் தனது சேவையின் பின்னணியில் தனது உணர்ச்சிபூர்வமான கதையையும் காரணத்தையும் பகிர்ந்து கொள்கிறார்.

மேலும் தகவல்களுக்கு, myagedcare.gov.au என்ற இணையதளத்தை அணுகவும்.

நலவாழ்வின் இணைவுப்பணி (Allied Health Services) (Radio 4EB – Tamil Oli, QLD)

இந்த அத்தியாயத்தில், மருத்துவர். கண்ணன் நடராஜன் (முதுமையியல் சிறப்பு மருத்துவர்) திருமதி. உமா பால்வண்ணனுடன் வயதானவர்களுக்கு கிடைக்கக்கூடிய ஒருங்கிணைந்த நல்வாழ்வு சேவைகள் குறித்து உரையாடுகிறார். "My Aged Care" மற்றும் அதனுடன் தொடர்புடைய  சேவைகளுக்கும், அதை எவ்வாறு அணுகுவது, அவற்றுள் இருக்கும் வித்தியாசத்தை அவர் கோடிட்டுக் காட்டுகிறார்.

மேலும் தகவல்களுக்கு, myagedcare.gov.au என்ற இணையதளத்தை அணுகவும்.

ஆரோக்கிய மறுசீரமைப்பு மற்றும் பராமரிப்பு (Wellness and Reablement) (Radio 4EB – Tamil Oli, QLD)

இப்பகுதியில், திருமதி உமா பால்வண்ணன், "My Aged Care" சேவைகளின் நுகர்வோர் மற்றும் அதிலிருந்து பயனடைந்து வரும் திரு. குணராஜாவுடன் உரையாடுகிறார்.  திரு. குணராஜா நீர்சிகிச்சை(Hydrotherapy) அமர்வுகள் மூலம் தனது உடல் வலிமையை மீட்டெடுக்க "My Aged Care" எவ்வாறு உதவுகிறது என்பதையும் விளக்குகிறார்.

மேலும் தகவல்களுக்கு, myagedcare.gov.au என்ற இணையதளத்தை அணுகவும்.

முதியோர் அவலம் மற்றும் துன்புறுத்தல் (Elder Abuse) (Radio 4EB – Tamil Oli, QLD)

திரு. பழனி தேவர் இந்த அத்தியாயத்தில் முதியோர் அவலம் மற்றும் துன்புறுத்தல் குறித்து திருமதி.  உமா பால்வண்ணனுடன் உரையாடுகிறார்.  முதியோர் அவலம் தொடர்பாக "My Aged Care"ல் இருந்து வயதானவர்களுக்கு என்ன சேவைகளைப் பெற முடியும் என்பதை அவர் விளக்குகிறார், மேலும் தனது நண்பர்களில் ஒருவர் எவ்வாறு முதியோர் அவலத்திற்கு உட்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்டார் என்பதை பற்றிய சோகமான அனுபவத்தையும் பகிர்ந்து கொள்கிறார்.

மேலும் தகவல்களுக்கு, myagedcare.gov.au என்ற இணையதளத்தை அணுகவும்.

The Speak My Language program is an initiative funded by the Commonwealth Government under the Dementia and Aged Care Services Fund Research and Innovation Grants 2017. It is proudly supported by ECCNSW and its primary partners ECCV, ECCQ (Diversicare) and our national broadcasting partners SBS and NEMBC.

© 2017 Speak My Language

  • Facebook Social Icon
  • Twitter Social Icon
  • YouTube Social  Icon